fbpx
Others

கிளாம்பாக்கம்ரயில் நிலையம்,நடைமேம்பாலம்.,ஏப்ரல்மாதக்குள்பணிகள்முடிவடையும்..

Minister Sekarbabu informed that Kilambakkam railway station will be available for public use in a couple of months Kilambakkam railway station : இன்னும் 2 மாதம் தான்... கிளாம்பாக்கம் ரயில் நிலையம், நடைமேம்பாலம் திறக்கப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்புதமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்திற்குள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் கோயம்பேட்டை நோக்கி வருவதாலும், அனைத்து பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்ட அளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.சுமார் 6.4 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.393.74 கோடி செலவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து கடந்த 2023 ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதி நவீன வசதிகளோடு உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்  130 அரசு பேருந்துகளுக்கு, 85 தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நின்று செல்லும் வகையில் 14 நடை மேடைகள் அமைக்கப்பட்டது. அனைத்து வசதிகள் இருந்த போதும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்களும், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்லவும் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை நீடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர்.குறிப்பாக ரயில் நிலையத்தோடு கிளாம்பாக்கம் இணைக்காத காரணத்தால் கூடுவாஞ்சேரி அல்லது காட்டாங்குளத்தூரில்இருந்துவேறுவாகனங்களில்கிளாம்பாக்கத்திற்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பாகவும் நிதி ஒதுக்கப்பட்டது. சுமார் இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பேருந்து நிலையத்தையும்- கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதுஇது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,ஏப்ரல்மாதஇறுதிக்குள்கிளாம்பாக்கம்மேம்பாலபணிகள்முடிவடையும்.நாங்கள்  என்னவடிவமைத்தமோ அந்த திட்டமிடலுக்கு மேலாக நேர்த்தியாக கிளாம்பாக்கம் நடை மேம்பால பணிகள் நிறைவுபெறும் என கூறினார். மேலும்  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்தெற்குரயில்வேக்குகொடுத்தநிதியும்முழுமையாகபயன்படுத்திஓரிருமாதங்களில்  கிளாம்பாக்கம் ரயில் நிலையமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close