வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்–ஐ.நா கடும் கண்டனம்…
வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடத்த கொலம்பியா கோரிக்கை வைத்தது.இதனைத் தொடர்ந்து,ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம்..இந்த கூட்டத்தில் சீனா, கொலம்பியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் உரையை துணைப் பொதுச் செயலாளர்ரோஸ்மேரி டிகாப்லோ வாசித்தார். வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால்கைதுசெய்யப்பட்டதற்குஐ.நாகண்டனம்தெரிவிக்கிறது. நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளை மதிக்க வேண்டும். நாட்டில் நிலைத்தன்மை மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்தும், அதனால் பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றனஎன்பதற்கு இது முன்னுதாரணமாக அமையக் கூடும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் அமெரிக்கதூதர்மைக்வால்ட்ஸ்பேசியதாவது: அமெரிக்க நீதித்துறையால் குற்றம்சட்டப்பட்ட இரண்டு தேடப்படும்குற்றவாளிகளானமதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தால் எடுக்கப்பட்ட துல்லியமான சட்ட அமலாக்க நடவடிக்கைஆகும்.வெனிசுவேலாஅல்லதுஅந்நாட்டுமக்களுக்கு எதிராக எந்தப் போரும் இல்லை. நாங்கள் அந்நாட்டைக்கைப்பற்றவில்லைஎனத்தெரிவித்தார்.