தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…?
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரும் சூழலில், அவர்இல்லாமல்நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுநீதிமன்றக்காவலில்அடைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல்தவெகபொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இதனிடையே புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு ஏற்காட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனிப்படை அமைத்து புஸ்ஸி ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் தவெகவின் சென்னை மாவட்டச்செயலாளர்கள்கூட்டம்நடைபெற்றுஇருக்கிறது. வழக்கமாக பொதுச்செயலாளர் தலைமையில் தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும். ஆனால் இம்முறை புஸ்ஸி ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதால், சென்னை மாவட்டச் செயலாளர்கள் தாமாகவே ஆலோசனையை நடத்தி முடித்துள்ளனர்.ஏற்கனவே தவெகதரப்பில்விஜய்யின்மக்கள்சந்திப்புகூட்டங்கள்2வாரங்களுக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது கரூர்சம்பவத்தைஎவ்வாறுஎதிர்கொள்வதுஎன்றுதொடர்பாகஆலோசனைநடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தவெகவின் அடுத்தக் கட்ட திட்டங்கள் மற்றும் விஜய்யின் பிரச்சார கூட்டத்தை வடிவமைப்பது தொடர்பாகஆலோசனைநடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கரூர் விவகாரம் காரணமாக தமிழ்நாடு சோகத்தில் இருக்கும் சூழலில், தவெகவின் முன்னணிநிர்வாகிகள்தலைமறைவாகி இருக்கின்றனர். ஆனாலும் மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருப்பது அக்கட்சியின் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.