fbpx
Others

போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி!

புழல் காவல் நிலையம் சார்பில்மாணவ, மாணவிகள் நடத்திய
போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி!

செங்குன்றம், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ஆணைக்கிணங்க, உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு போதை விழிப்பு உணர்வு பேரணி புழல் காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த், குற்றப்பிரிவு ஆய்வாளர் பெருந்துறை முருகன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா, மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர் மாலதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் புழல் ஜெயின் வித்யாஷ்ரம் தனியார் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை, மற்றும் போதை பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி புழல் ஜி.என்.டி. சாலை, காந்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போதை பழக்கத்தை தடுப்போம் என கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.இப்பேரணியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close