fbpx
Others

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் விரிசல் ஏற்படுமா…?

‛‛அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா இன்னும் 2 மாதங்களில் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரும், அமெரிக்க வர்த்தக செயலாளருமான ஹோவர்ட் லுட்னிக் திமிராக பேசி உள்ளார்.நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருந்தdonald-trump-tariffs-row-how-us-profits-big-from-india-says-gtri-data உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே இருந்த நட்பில் கீறல் விழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிரம்ப் தான். நம் நாட்டின் மீது டொனால்ட் டிரம்ப்விதித்த50சதவீதவரிதான்இந்தபிரச்சனைகளுக்கு மெயின் காரணம். இந்த வரியால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளதுஅமெரிக்கா நமக்கு விசுவாசமாக இருக்கும் என்று நம்நாடுநினைத்தது. ஆனால் டிரம்ப் முதுகில் குத்திவிட்டார். இதனால் அமெரிக்கா மீதான நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார். அமெரிக்காவின் வர்த்தக சரிவை மீட்டெடுக்க பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுடன் நம் நாடு கைகோர்த்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எண்ணவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பு சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்ஆகியோருடன் தனித்தனியாக பேசியது. 3 பேரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடியின் அடிவயிறு கலங்கிப்போய் உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக 3 நாடுகளும் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் உள்ளார்.இதனால் டிரம்ப் இப்போது பிரதமர் மோடி என் நண்பர். அவருடன் நட்பை தொடர்வேன். இந்தியா – அமெரிக்கா உறவை மீட்டெடுப்பேன் என்று கூறி வருகிறார். இதற்கிடையே தான் ‛‛இந்தியா இன்னும் 2 மாதங்களில் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்கும்” என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் திமிராக பேசி உள்ளார்.us-tariffs-amid-of-donald-trump-tariff-row-india-wants-to-buy-more-crude-oil-from-russia-with-disco இருநாடுகள் இடையே வர்த்தக விஷயத்தில் பிரச்சனை உள்ள நிலையில் அவர் இப்படி கூறி உள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில், ‛‛இது எல்லாம் துணிச்சல். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த விரும்பவில்லை. பிரிக்ஸ் குழுவில் இருந்து வெளியேற முயற்சிக்கவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்யா – சீனாவுடன் நெருங்கிய உறவாகி உள்ளது. விரைவில் அமெரிக்காவின் வாடிக்கையாளர் வேண்டும் என்று சொல்வார்கள். 50 சதவீத வரியை தடை போட வேண்டும் என்று சொல்வார்கள்.ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில்…இந்தியாபேச்சுவார்த்தைநடத்தவிருப்பம்தெரிவிக்கும்.அவர்கள்அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள், டொனால்ட் டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். மேலும், வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும் போது, மோடியை எவ்வாறு டீல் செய்ய வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்” என்று திமிராக பேசி உள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close