Others
திமுக எம்.எல்.ஏ-வும் திமுக எம்.பி யும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட அரசு நிகழ்ச்சி….
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த முகாமினை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டன.
அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் என்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன், தேனி தொகுதி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜனின் படம் மட்டும் இருந்தது, ஆனால் எம்.பி ஆன தனது படம் இல்லாததால் மேடைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சியரிடம் கடிந்து கொண்டார்.அப்போது நலத்திட்ட அட்டையை தங்க தமிழ்ச்செல்வன் கையில் இருந்து பிடுங்கி நான் தான் பயனாளிகளுக்கு வழங்குவேன் என எம்.எல்.ஏ மகாராஜன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தங்க தமிழ்ச்செல்வனை கையை உயர்த்தி ஒருமையில் பேசிய எம்எல்ஏ மகாராஜன், ‘ஏன்டா டேய் யாரை முட்டாப்பயனு சொல்ற.. ராஸ்கல்..’ என குரலை உயர்த்தி கடுமையாக பேசினார். மகாராஜன் உடன் இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட அட்டையை வழங்க முயன்ற போதும், தங்கதமிழ்ச்செல்வனின்கையைஅவர்தட்டிவிட்டார்.மாவட்டஆட்சியர்முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ-வும் திமுக எம்.பி யும் ஒருமையில் பேசி மோதிக்கொண்டதால் அரசு நிகழ்ச்சி விரைவாகவே முடிக்கப்பட்டது.அரசு விழாவில் திமுக எம்.பியும், திமுக எம்.எல்.ஏ-வும் ஆட்சியர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பானவீடியோதற்போதுஇணையத்தில்வைரலாகபரவிவருகிறது..


