அமித் ஷா-எடப்பாடி –நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே…..?
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தார். ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா கூறவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என அமித் ஷா பதில் அளித்துள்ளார்.அண்மையில் தமிழ் நாளிதழ்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், அதில்பாரதியஜனதாஅங்கம்வகிக்கும்எனவும்கூறியிருந்தார்.இதனைதொடர்ந்து,கள்ளக்குறிச்சிமாவட்டம்உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார். இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால்,தமிழ்நாட்டில்கூட்டணிஆட்சிதான்அமையும்என்றுமீண்டும்திட்டவட்டமாகதெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், அந்த அரசில் பாஜக அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு, ஆம் என்று அமித் ஷா பதில் அளித்துள்ளார்.இந்நிலையில் இதுபற்றிஇன்றுசெய்தியாளர்கள்எழுப்பியகேள்விக்குப்பதிலளித்தஅதிமுகபொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமி,”நான்தான்ஏற்கெனவேசொல்லிவிட்டேனே..தமிழ்நாட்டில்தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.” என்று கூறியுள்ளார்.அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று கூறிய நிலையில், அவரது பேச்சை நிராகரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு” என்று கூறியுள்ளார்.