Others
இராணிப்பேட்டை–தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளருக்கு டாக்டர் பட்டம்..

ஆற்காடு ஜூன் 24:-
சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியதுஆற்காடு அடுத்த தாயனூர் ராமாநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்.விஸ்வநாதன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார்இவருக்கு அமெரிக்காவில் உள்ள வயது வந்தோர் மற்றும் தொடர் கல்விக்கான அமெரிக்க சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்புமிக்க கல்வி நிறுவனமான USA சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கல்வி நிறுவனம் இவரின் மனித நேயம், சமுதாய பங்களிப்புகளை ஆராய்ந்து கடந்த 26. 06. 2025 அன்று மதுரை மாட்டுத்தாவணி தனியார் விடுதியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் ஆப் லெட்டர்ஸ் டிலிட் அமெரிக்கா என்ற டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டியது.