fbpx
Others

தேனி–எலக்ட்ரிக் லோகோவை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி. அதாவது நாளை 02/02/ 2025 ஞாயிற்றுக்கிழமை முதல் எலக்ட்ரிக் லோகோவை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெறும் என்று இரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று மாலையே 6:00 மணி முதல் 25,000 ஓல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது . இது நிரந்தரமாக பாய்ச்சிக் கொண்டே இருக்கும் .ஆகையால் தேனி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த ரயில்வே பகுதியை மிகவும் பாதுகாப்பாக கடக்க வேண்டுமாய் தமிழ்நாடு ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நமது தேனி மாவட்டம் விவசாய மாவட்டம் என்பதால் இரும்பு பொருட்களால் ஆன துரட்டி மற்றும் வலைகள் போன்ற ஏனைய பொருட்களை எடுத்துச் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல் குடைகளைப் பிடித்துக் கொண்டு ரயில் பாதையை கடக்க வேண்டாம் .அதுவும் குறிப்பாக மழை நேரங்களில் மிக ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் தண்டவாளங்களில் நடப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மிக ஜாக்கிரதையாக லெவல் கிராசிங் கினை கடக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை அந்தப் பகுதியை கடக்கும் முன் அளவை சரிபார்த்து கடக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளனர் ஆகையால் தேனி மாவட்ட மக்கள்அனைவரும்இதனைமனதில்வைத்துதயவுசெய்துஇருப்புப்பாதையைஉபயோக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்………………………………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close