fbpx
Others

கிருஷ்ணசாமி–அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்? டாக்டர்  கிருஷ்ணசாமி கேள்விஅரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே சுமார் 20 அடி உயரமுள்ள குட்டையான பனை மரத்தை தேர்வு செய்து, முன்கூட்டியே மிகவும் பாதுகாப்பாக பலமான கயிறுகளால் உருவாக்கப்பட்டிருந்த ஏணிப் படிக்கட்டுகளில் விறு விறுவென ஏறி, ஏற்கனவே தயாராக வைக்கப்பட்ட ‘கள்’ளை இறக்கி, அங்கேயே‘கள்’குடித்து,போராட்டஷூட்டிங்கைசீமான்வெற்றிகரமாகமுடித்திருக்கிறார்பனை  பனையேறி ‘கள்’ இறக்கும் சாதனை வீடியோக்கள் உலகம் முழுவதும் போய்ச்சேர வேண்டியவர்களிடம் விரைந்து சென்றுவிட்டது. ‘கள்’ மற்றும் சாராயம் போன்ற போதைப்பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால், பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால்தான் தடை செய்யப்பட்டுள்ளது.இதை அறியாமல், சட்ட விரோதமாக நடந்த ‘கள்’ இறக்கும் போராட்டத்தை சீமான் நடத்தியுள்ளார்.‘கள்இறக்குவோரை’ கைதுசெய்தால், காவல் நிலையம் உடைத்தெறியப்படும் என சீமான் அரிவாளை தூக்கி காட்டுகிறார். சட்ட விதிமுறைகளை மீறி ‘கள்’ இறக்கியதுடன், அரிவாளை தூக்கிக்காட்டி காவல்துறைக்கு கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும். இல்லையேல், புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close