fbpx
Others

பிரதமர் மோடி5 நாள் அரசுமுறைபயண​மாக சைப்ரஸ், கனடா, குரேஷியா நாடுகளுக்குபுறப்பட்டார்..

PM Modi meets Egyptian counterpart, top ministersஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்த எம்​.பி.க்​கள் குழு​வினர் உலகின் பல்​வேறு நாடு​களுக்​கும் சென்​று, பாகிஸ்​தானின் எல்லை தாண்​டிய தீவிர​வாதம் குறித்து நேரடி​யாக விளக்​கம் அளித்​தனர்இந்​நிலை​யில், பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு முதல்​முறை​யாக பிரதமர் மோடி வெளி​நாட்டு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். டெல்​லி​யில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ‘ஏர் இந்​தியா ஒன்’ தனி விமானத்​தில் பிரதமர் மோடி சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். 5 நாள் பயண​மாக சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.இதுகுறித்து பிரதமர் மோடி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சர்​வ​தேச அளவில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து கருத்​துகளை பரி​மாறிக்​கொள்ள, கனடா​வில் நடை​பெறும் ஜி7 மாநாடு இடமளிக்​கும் என்று நம்​பு​கிறேன். ஜி7 மாநாட்​டின்​போது பல்​வேறு நாட்டு தலை​வர்​களை சந்​திக்க ஆர்​வ​மாக இருக்​கிறேன். மேலும், இந்​தி​யா​வின் தீவிர​வாத எதிர்ப்​புக்கு ஆதரவு அளித்த நாடு​களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்​பாக​வும் எனது பயணம் அமை​யும். குறிப்​பாக, சைப்​ரஸ் நாடு இந்​தி​யா​வுடன் மிக நீண்ட கால​மாகவே நல்​லுறவுடன் இருக்​கிறது. இந்​தி​யா​வுடன் நட்பு நாடாக​வும், மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய யூனியனில் மிக முக்​கிய நாடாக​வும் உள்​ளது. இந்த நாட்​டுட​னான வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, தொழில்​நுட்​பம், பரஸ்​பரம் பொது​மக்​கள் சந்​திப்பு போன்​றவற்றை மேம்​படுத்த எனது பயணம் மிக​வும் உதவும்.குரேஷிய அதிபர் ஜோரன் மிலனோவிக், பிரதமர் ஆண்ட்​ரேஜ் பிளன்​கோவிக் ஆகியோரை​யும் சந்​திக்க உள்​ளேன். இந்​தி​யா​வும், குரேஷி​யா​வும் 100 ஆண்​டு​களுக்கு மேல் நெருங்​கிய கலாச்​சார உறவு​களை கொண்​டுள்​ளது. இந்​திய பிரதமர் என்ற முறை​யில் முதல்​முறை​யாககுரேஷியா செல்​வ​தால், அந்த நாட்​டுடன் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கப்​படும். இருதரப்பு உறவு​களை மேம்​படுத்த இந்த பயணம் உதவும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.முதல் கட்​ட​மாக மத்​திய கிழக்கு நாடான சைப்​ரஸ் செல்​லும் பிரதமர் மோடி இன்று அந்​நாட்டு தலை​வர்​களை சந்​தித்​து, பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார். பின்​னர், பிரதமர் மோடி கனடா செல்​கிறார். கனடா​வில் ஜி7 நாடு​களின் வரு​டாந்​திர உச்சி மாநாடு 17, 18-ம் தேதி​களில் நடை​பெறுகிறது. அந்த மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பை ஏற்று மோடி அங்கு செல்​கிறார்.ஜி7 மாநாட்​டில், எரிசக்தி பாது​காப்​பு, தொழில்​நுட்​பம், புதிய கண்​டு​பிடிப்​பு​கள், ஏஐ-ஆற்​றல் இணைப்​பு, குவான்​டம் போன்ற துறை​களில் இருதரப்பு உறவை வலுப்​படுத்​து​வது குறித்து ஜி-7 தலை​வர்​கள், அந்த அமைப்​புடன் தொடர்​புள்ள நாடு​கள் மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் மோடி கலந்​துரை​யாடு​கிறார்.இந்த மாநாட்​ன்போது,பிரதமர் மோடி பல்​வேறு நாடுகளின் தலை​வர்​களை​யும் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​து​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதை தொடர்ந்​து, குரேஷியா பிரதமர் ஆண்ட்​ரேஜ் பிளன்கோ​விக்கின் அழைப்பை ஏற்று மோடி 19-ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். குரேஷியா அதிபரை​யும்​ சந்​திக்​கிறார்​. பின்னர், பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்​புகிறார்​. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டின் அண்டை நாடுகளாக துருக்கி, இஸ்ரேல், எகிப்து, லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது, துருக்கியின் ட்ரோன்கள் மூலம்தான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய பாதுகாப்பு கருவிகள் முறியடித்தன. இந்த போரின்போது, பாகிஸ்தானுக்கு துருக்கி பகிரங்கமாக ஆதரவு அளித்தது. தவிர, துருக்கி – சைப்ரஸ் இடையே எல்லை பிரச்சினை உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், கடைசியாக வாஜ்பாயும் சைப்ரஸ் நாட்டுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர், சைப்ரஸ் செல்வது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
Close
Close