fbpx
Others

காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற நடிகர்…..

பிரபல கேரள கால்பந்து வீரர்ஐ.எம். விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலின் ‘திமிரு’, கார்த்தியின் ‘கொம்பன்’, உதயநிதியின் ‘கெத்து’, விஜய்யின் ‘பிகில்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.இவர் கேரள போலீஸ் கால்பந்து அணியில் கௌரவ வீரராக 1986-ஆம் ஆண்டு முதல் ஆடி வந்தார். 1987-ஆம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிளாக நியமிக்கப் பட்டார். பின்னர் மலபார் ஸ்பெஷல் போலீஸில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வழங்கப்பட்டிருந்தது. அவர் பதவி காலம் முடிவடைவதாக இருந்த நிலையில், கால்பந்து விளையாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, டெபுடி கமாண்டன்ட்டாக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close