Others
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்..
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது, இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்பூம்பாவை(வ,ஊ ) மற்றும்ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு, கலைஞர் கனவு திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல், அங்கன்வாடி சுகாதாரம், மதிய உணவு திட்டம், வேளாண்மை போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டன, நிறைவாக ஊராட்சி செயலாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.