வீட்டு உரிமையாளரின் பிரோவில் இருந்த நகைகளை திருடிய பணிப்பெண் !
கோவை., மார்., 08 :
குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் இவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் தென்காசியை சேர்ந்த அழகு சாந்தி என்பவரை தனது மனைவியை பார்த்துக் கொள்வதற்காக நியமித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21.02.2025 அன்று பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 16 சவரன் மற்றும் ரூ.3000/- காணாமல் போயிருப்பது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் பணிப்பெண் அழகு சாந்தி ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் கஸ்தூரி ஊருக்கு சென்ற பணிப்பெண் அழகு சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது தென்காசியை சேர்ந்த முருகன்(46) என்ற நபர் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருடிய நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 131 கிராம் தங்க நகைகளை மீட்டனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்