மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுவந்தார்.இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு திங்கள்கிழமை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை க்ரீம்ஸ்சாலைஅப்பல்லோமருத்துவமனையில்அவர்அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டதயாளுஅம்மாளுக்குவிரிவானமருத்துவசிகிச்சைவழங்கப்பட்டுவருகிறது.தயாளுஅம்மாளுக்குஉடல்நலக்குறைவுஏற்பட்டவிவரம்தமிழகமுதல்வர்மு.க.ஸ்டாலினுக்குதெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயாரைக் காண மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார். தயாளு அம்மாளுக்கு 92 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.