fbpx
Others

தேனிஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருநாள் பயிற்சி முகாம்…

 இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கலையின் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கூட்டரங்கில் நடைபெற்றது தேனி மாவட்டத்தில் உள்ள 33 கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேனி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை சேர்மன் திரு வி. மகாராஜன் , பொருளாளர் திரு.எஸ்.முகமதுஷேக்இப்ராஹிம்,நிர்வாககுழுஉறுப்பினர்கள்திரு.எஸ்.மணிதிரு.ஏ.முகமது பாஷா ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.கருத்தரங்கில் ரெட் கிராஸ் வரலாறு அடிப்படைக் கொள்கைகள், ஜெனிவா உடன்படிக்கைகள், கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ்செயல்பாடுகள்,இரத்ததானம்மற்றும்போதைப்பொருள் விழிப்புணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சி வழங்கினர்.ஜூனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் திரு.ஏ.செல்வன் திரு.ஒ.பார்த்திபன் திரு.ஈ. ஜெகநாதன் திருமதி. சிறுமலர், நிர்வாகச் செயலர் மீனாம்பிகை, ஜோதி மற்றும் போதை பொருள் தடுப்பு ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் கருத்தாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் திரு.க.சுருளிவேல் செய்திருந்தார். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர் 

 

Related Articles

Back to top button
Close
Close