Others
ஈரோடு–வாகனம் மோதி தொழிலாளி பலி…

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கவுண்டன்புதூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பச்சியப்பன் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்