Others
பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை -டீக்கடைக்கு ‘சீல்’

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கபிலர் வீதியில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மளிகைக்கடை, டீக்கடையில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று கடைகளில் சோதனை செய்தனர். இதில் விற்பனைக்காக பீடி, சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மளிகை கடை மற்றும் டீக்கடையின் உரிமத்தை ரத்து செய்து ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மாவட்ட நிருபர்SKT சுரேஷ்குமார்