மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் !

மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் ! கோயம்புத்தூர் கோவை மாவட்டம், கணபதிநகர், சுல்தானிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து குடியிருப்பதாக கோவை மாவட்டம், வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலம் கடந்த (22-01-2025) அன்று அனைத்து குடியிருப்பு வாசிக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்டனர். பின்னர் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியின் அருகில் இலவச வீட்டுமனை கேட்டு மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நாங்கள் 50 வருடத்திற்கும் மேலாக இப்பகுதியில்வசித்துவருவதாகவும்,நாங்கள்மிகவும்பொருளாதாரத்தில்நலிவடைந்துள்ளதாகவும், பெரும்பாலான குடும்பங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். அந்த வருமானத்தில் தான் குடும்பத்தையும், பிள்ளைகளின் படிப்பையும் சமாளித்து வருவதாகவும், அனைத்து குடியிருப்பு மக்களும் முறையாக சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தி வருவதாக தெரிவித்தனர். தற்போது இந்த இடத்தை விட்டு நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். நாங்கள் அரசின் சட்டத்தினை மதிப்பதாகவும், எங்களுக்கு அரசு மூலம் மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.