fbpx
Others

ஈரோடு–கத்தி போடும் திருவிழா..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இன்று தை மாதம் பிறப்பையொட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், பவானி நதிக்கரையில் இருந்து அம்மனை அழைப்பதற்காகவீரக்குமாரர்கள் கத்தியால் தங்கள் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close