கோவையில் ஶ்ரீ வரத ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அஷ்டாம்ஸ ஶ்ரீ வரத ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமந்ஜெயந்தி விழா
சிறப்பாக நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அஷ்டாம்ஸ ஶ்ரீ வரத ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் இரண்டு நாட்களாக உலக நலன் வேண்டி ஞாயிறு காலை முதலே மஹா சாந்தி ஹோமம், மஹா அன்னதானம், மற்றும் மூலவருக்கு ஐந்நூறு லிட்டர் பால் மற்றும் பதினாறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆஞ்சநேய சுவாமி ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் முழுவதும் 1 இலட்சம் மலர்களை கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. அன்றைய தினம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்றும் கோயிலின் தலைமை அச்சகர் திரு.நாராயண பட்டர் தெரிவித்தார். பக்தர்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்தும் பணியில் பீளமேடு காவல் துறையும், விழாக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும் சிறப்பாக செய்திருந்தனர்.