Others
செங்குன்றம்–முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா !

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா!செங்குன்றம் பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது!!
செங்குன்றம்.டிச 27 முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூறாவது பிறந்தநாள் விழா மாதவரம்தொகுதி புழல் மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.
முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மண்டல அலுவலகத்தில் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினர். கணேசன், நரேஷ் குமார் ஆகியோர் வாஜ்பாய் அரசின் சாதனைகளை விளக்கினர். ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள்மகளிர் கலந்து கொண்டனர்…