fbpx
Others

ஈரோடு-புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் மடக்கி பிடித்த போலீசார்..

புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் கும்பல் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார்   ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள காராப்பாடியை சேர்ந்தவர் திரு வேங்கடம். வயது 55விவசாயியான இவர் ஐந்து வெள்ளாடு வளர்த்து வருகிறார்.நேற்று காலை வழக்கம் போல் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஹோண்டா சைன் பைக்கில் வந்த மூவர். மேய்ந்து கொண்டிருந்த ஒரு வெள்ளாட்டைபிடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருவேங்கடம் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் புஞ்சை புளியம்பட்டி போலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு,டூவீலரில் வந்து ஆடு திருடிய கும்பல் மக்கள் உதவியுடன் மடக்கிய போலீசார்இரண்டு பைக்குகளில் திருடர்களை துரத்தினர்.வெள்ளாட்டை திருடிய கும்பல் பைக்கில் செல்லும் வழியை பின் தொடர்ந்த மக்கள் போலீசாருக்கு மொபைல் போனில் ரன்னிங் கமென்ட்ரியாக தெரிவித்தபடி பின் தொடர்ந்தனர். புன்செய் புளியம்பட்டி கோவை சாலை, வாரச்சந்தை இரண்டாவது நுழைவுவாயில் பகுதியில் காத்திருந்தபோலீசார், பைக்கில் தப்பிய கொள்ளையரை மடக்கி பிடித்தனர்விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகராஜ், தை ஸ்ரீஹரி சிவகுமார். 23, மற்றும் 14வயது புளியம்பட்டி வாரச்சந்தையில் தங்கி கூடை பின்னும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது.ஸ்ரீஹரி சிவகுமார் சிறுவன் என இரண்டு பேரும்
ஈரோடு கூர்நோக்கு இல்லத்துக்கு சிறுவனை அனுப்பி வைத்த போலீசார், மற்ற இருவரையும் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். வெள்ளாட்டை மீட்டு திருவேங்கடத்திடம் ஒப்படைத்தனர்.பைக்கில் வந்து ஆடு திருடிய கும்பல்.. மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close