மராட்டியம், ஜார்கண்ட்சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது…
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கிநடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புஏற்பாடுகள்செய்யப்பட்டுஉள்ளன.பதற்றம்நிறைந்தவாக்குச்சாவடிகளில்மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறதேவையான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன்மேற்கொண்டுள்ளது.
மராட்டிய துணை முதல்-மந்திரியும், பாராமதி சட்டசபை >
தொகுதியின் என்.சி.பி. வேட்பாளருமான அஜித் பவார்,
மனைவி சுனேத்ராவுடன் பாராமதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைபோல ஜார்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.71 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.
< தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர்
சரத்பவார் பாரமதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
< சச்சின் டெண்டுல்கர் வாக்களித்தார்
அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர்தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.