fbpx
Others

மேகே​தாட்டு அணை– கர்​நாடக அரசுக்கு பெரும் பின்​னடைவு…

மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு  அனுமதிக்க கூடாது.. வைகோ | central government should not give permission to  mekedatu dam project : vaiko - Tamil ...கர்​நாடக அரசு காவிரி ஆற்​றின் குறுக்​கே, மேகே​தாட்​டு​வில் ரூ.9 ஆயிரம் கோடி செல​வில் 67.14 டிஎம்சி கொள்​ளளவுக் கொண்ட புதிய அணை​யைக் கட்ட முடி​வெடுத்​துள்​ளது. இதை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலை​யில், கர்​நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல்​கட்ட திட்ட வரைவு அறிக்​கையை மத்​திய அரசிடம் சமர்ப்​பித்​தது.அதை பரிசீலித்த மத்​திய நீர்வள ஆணை​யம், விரி​வான திட்ட அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது. அதன்​படி கடந்த 2019-ம் ஆண்டு விரி​வான திட்ட அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் கூறப்​பட்ட தகவல்​கள் காவிரி நடு​வர் மன்​றத்​தின் தீர்ப்​புக்கு முரணாக இருந்​த​தால், அதை திருத்தி வழங்​கு​மாறு மத்​திய நீர்வள ஆணை​யம் மீண்​டும் உத்​தர​விட்​டது.இதையடுத்​து, கர்​நாடக அரசு கடந்த ஏப்​ரல் மாதம் திருத்​தப்​பட்ட விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வள ஆணை​யத்​திடம் சமர்ப்​பித்​தது. இந்​நிலை​யில், ‘‘அந்த அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்ள தகவல்​கள், அந்த அறிக்கை குறித்து மத்​திய நீர்வள ஆணை​யத்​தின் நிலைப்​பாடு என்​ன?’’ என்று பூவுல​கின் நண்​பர்​கள் அமைப்பு தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்​தது.அதற்கு மத்​திய நீர்வள ஆணை​யம் அளித்​துள்ள பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கர்​நாடக அரசு சமர்ப்​பித்​துள்ள விரி​வான திட்ட அறிக்​கை​யில் முன்​னுக்​குப் பின் முரணான தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன.கடந்த 2018-ல் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பு மற்​றும் காவிரி நடு​வர் மன்ற தீர்ப்​பில் வழங்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை மீறும் வகை​யில் இருந்​த​தால், அந்த திட்ட வரைவு அறிக்கை திருப்பி அனுப்​பப்​பட்​டது. திட்ட அறிக்​கை​யைத் திருத்​தியோ அல்​லது புதிய விரி​வான திட்ட அறிக்​கை​யையோ தாக்​கல் செய்ய கர்​நாடக அரசுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.கடந்த 2018-ம் ஆண்டு தாக்​கல் செய்​யப்​பட்ட திட்ட அறிக்​கை​யில், குடிநீர் தேவைக்​காக அணை கட்​டு​வ​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது. அதன் ​பிறகு தாக்​கல் செய்​யப்​பட்ட விரி​வான திட்ட‌ அறிக்​கை​யில் சிவன ச​முத்​திரம் நீர்​மின் திட்​டத்தை மேகே​தாட்டு அணை திட்​டத்​துடன் இணைக்​கப் போவ​தாகத் தெரி​வித்​தது. அதற்​காக 4.75 டிஎம்சி நீரில் இருந்து 6.90 டிஎம்சி நீரை பயன்​படுத்​தப் போவ​தாகக் கர்​நாடக அரசு குறிப்​பிட்​டிருந்​தது.இந்த கூடு​தலான நீர் பயன்​பாடு உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு எதி​ரானது. அதே​போல, பெங்​களூரு மாநகரின் தற்​போதைய குடிநீர் தேவை 16.1 டிஎம்சி என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்​தத் தகவல்​கள் பழைய புள்ளி விவரங்​களில் இருந்து முரணாக இருக்​கின்​றன. எனவே கர்​நாடக அரசின் விரி​வான திட்ட அறிக்கை ஏற்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு மத்​திய நீர்வள ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.மேகே​தாட்டு அணை​யின் விரி​வான‌ திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வள ஆணை​யம் திருப்பி அனுப்​பியது கர்​நாடக அரசுக்கு பெரும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது. எனவே, கர்​நாடக அரசு மீண்​டும் திட்ட அறிக்​கையை திருத்தி மத்​திய அரசிடம் சமர்ப்​பிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்குவினாடிக்கு3,500கனஅடிநீரைகர்நாடகஅரசுதிறந்துவிடகாவிரிமேலாண்மைஆணையம்உத்தரவிட்டுள்ளது.கடந்த 28-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று அவசர கூட்டம்நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கர்நாடக அரசின் தரப்பில் தற்போதைய சூழலில் நீரை திறந்துவிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழகஅரசின்தரப்பில்ஆட்சேபம்தெரிவிக்கப்பட்டது.கடைசியில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறும்போது, ‘‘கர்நாடக அணைகளில் தற்போது 55 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. எனவே, வறட்சி கால நீர் பங்கீட்டின்படி, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close