பெரியகுளம்–அரசு தோட்டக் கலை கல்லூரியில் அங்கக வேளாண்மை கருத்து காட்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரம் சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்த கருத்து காட்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளத்தில் நடைபெற்றது.இக் கருத்து காட்சியினை தோட்டக்கலை துணை இயக்குனர் (தேனி) நிர்மலா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி அங்கக வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டார்.தேனி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை வணிக அலுவலர்கள்,பங்கேற்று சிறப்பித்தனர்.கல்லூரி முதல்வர் ஜெ ராஜங்கம் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர்நேர்முகஉதவியாளர்(வேளாண்மை)வளர்வதிஅறிமுகஉரையாற்றினார்கள்.இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கக வேளாண்மையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்ப உரை கல்லூரி பேராசிரியர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை தோட்டக்கலை, பாரம்பரிய விதை பொருட்கள், உயிர் உரங்கள்,இயற்கை உரங்கள், காளான் வளர்ப்பு , பாரம்பரிய மதிப்பு கூட்டு பொருட்கள், தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த கண்காட்சிஅரங்கம்அமைக்கப்பட்டு இறுதியாக உத்தமபாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மி நன்றி கூறினார்.
சிறப்பு நிருபர்
தேசநேசன்
ஜெய ஹரிஹரன்