சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்.
: சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம். அமைப்பாளர்கள்,துணைஅமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஒன்றியம் நகரம்பேரூர்பகுதிகளுக்கானஅமைப்பாளர்,துணைஅமைப்பாளர்களுக்கான நேர்காணல் திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் கோகுல் அவர்களின் தலைமையில், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசுகையில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது இந்த நீட் தேர்வை மிக விரைவில் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மூலமாக ரத்து செய்ய ப்படும் என்று பேசினார்.இந்த நேர்காணலில் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திமுக மாணவரணி மற்றும் கம்பம் ஒன்றியம், ஆண்டிபட்டி ஒன்றியம், சின்னமனூர் ஒன்றியம், போன்ற பகுதிகளில் இருந்து திமுக மாணவரணி ஏராளமானோர் நேர்காணலில் கலந்துகொண்டு தங்களுடைய விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் மாணவரணி மாநில துணை செயலாளர் கோகுல் அவர்கள் சரி பார்த்து நேர்காணல் செய்தார்.இந்த நேர்காணல் ஆலோசனை கூட்டத்தில் திமுக மாணவர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிருபர்நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்