fbpx
Others

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கொடுக்கப்படுமா…?

mk stalin udhayanidhi முதல்வர்ஸ்டாலின்வெளிநாடு  கிளம்பும் போதெல்லாம் தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றம் குறித்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்றும் பேச்சுக்கள் அடிபடும். அந்த வகையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா கிளம்புவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி குறித்து பேச்சு எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த போது அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழிஉள்ளிட்டவர்கள் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும், துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும்என்றுஊடகங்கள்வாயிலாககோரிக்கைவைத்தனர்.அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது துணை முதல்வர் பதவி குறித்து பேச்சுஎழுந்ததால் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம்இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..அப்போது அவரிடம் , உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்ட போது, “முதல்வர் வலது புறம் செல்லுமாறு கூறினால், வலதுபக்கம் செல்வோம். இடதுபுறம் செல்லுமாறு கூறினால், இடதுபக்கம் செல்வோம்
.. முன்னோக்கி செல் என்றால் முன்னோக்கிச் செல்வோம், பின்னோக்கி செல் என்றால் பின்னோக்கி செல்வோம். நான் அடிப்படை தொண்டர்களில் தொண்டன் நான். இந்த பெரிய விஷயங்கள் எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது,” என்று கூறினார்.

 

.

Related Articles

Back to top button
Close
Close