fbpx
Others

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க-சிறப்புசெய்தி.

செங்குன்றம் சுற்று வட்டார அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஊக்கத்தொகையாக ரூபாய் மூன்று லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டது நெல்அரிசி வணிகர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் .கோபி தலைமை தாங்கினார். செயலாளர். லோகநாதன். பொருளாளர். குணசேகர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் துளசிங்கம் பொது செயலாளர் .டாக்டர். மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் .சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவர் சமரபுரி . பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர். புண்ணியகோடி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க தொகையை வழங்கினர்.சங்க நிர்வாகிகள் மாணவர்களின் பெற்றோர்கள். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close