fbpx
Others

காங்கிரஸ்– தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்கட்சி,அவைதேர்தல்முறைகேடுகளைநியாயப்படுத்துவதற்கானதிட்டமிடப்பட்டமுயற்சிஎன்றுகுற்றம்சாட்டியுள்ளது.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த100நாட்களுக்கானவேலைத்திட்டம்குறித்துபிரதமர்மோடிஆய்வுநடத்துவதற்குகாரணம்இருக்கிறது.இவைஅனைத்தும்,நான்திரும்பிவருகிறேன்,மீண்டும்பிரதமராகப்போகிறேன்எனக்கூறும்ஒருவகையானஉளவியல்ரீதியிலானவிளையாட்டு.அவர்நாட்டின்நிர்வாகஅமைப்புக்கும்,அரசுஅதிகாரிகளுக்கும்ஒருஎச்சரிக்கையைவிடுக்கிறார். .வாக்கு எண்ணிக்கையை நியாயமாக நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பயப்படமாட்டார்கள் என்று நம்புகிறோம். இந்த தந்திரஅழுத்தங்களுக்கு யாரும் அச்சப்பட வேண்டாம். சனிக்கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் போலியானவை. ஜூன் 4ம்தேதிவெளியேற  உள்ள ஒரு மனிதரின் தந்திரம் அது.இவையெல்லாம், பதவியில் இருந்து வெளியேறப்போகும் பிரதமர் (நரேந்திர மோடி) மற்றும் உள்துறை அமைச்சரின் (அமித்ஷா)உளவியல்விளையாட்டுக்களின்ஒருஅங்கம்.வெளியேறப்போகும்உள்துறைஅமைச்சர்நேற்று150மாவட்டஆட்சியர்களை அழைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையுடன் ஒத்துப்போகவில்லை. கருத்துக்கணிப்பில், என்டிஏ கூட்டணி சில இடங்களில் அங்கு இருக்கும் மொத்த இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூடி பேசினோம். நாங்கள் மாநில வாரியாக பகுப்பாய்வு செய்தோம். இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும்.இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் மோசடியை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியே. இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். மேலும் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தொண்டர்களின் மன உறுதியை குலைப்பதற்கான முயற்சியுமாகும்.நாங்கள் பயப்படப்போவதில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஜூன் 4ம் தேதி வெளியாகும் உண்மையைான தேர்தல் முடிவுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இவைஅரசியல்கருத்துக்கணிப்புகள், தொழில்முறை கருத்துக்கணிப்புகள் இல்லை.காங்கிரஸ் பொருளாளரும், கட்சியின் மூத்த தலைவருமான அஜய் மக்கான், வாக்கு எண்ணும் போது, உதவி தேர்தல் அதிகாரியின் மேஜைக்கு அருகில் கட்சியின் முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற விஷயத்தை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியுள்ளார். அவர்களிடமிருந்து சில பதில்கள் வந்துள்ளன. வேட்பாளர்கள் வெளிப்படுத்திய நியாயமான அச்சத்தின் அடிப்படையிலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி இந்த 77 நாட்களில் 117 புகார்களை அளித்துள்ளோம். அதில் 14 புகார்கள் பிரதமருக்கு எதிரானவை.ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து நம்பகமான பதில்கள் வரவில்லை.அதுஒருசட்டப்பூர்வமான அமைப்பு. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். அதன் முக்கிய வேலை குறித்த நம்பிக்கையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்துக் கட்சிகளும் அணுகக்கூடிய வகையிலும், பாஜகவின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக செயல்படாமலும் தேர்தல்ஆணையம்இருக்கும்என்றுநம்புகிறோம்”என்றுதெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிகப் பெரியஜனநாயகத்திருவிழாவான2024மக்களவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்தது.இதனைத்தொடர்ந்துதேர்தலுக்குபிந்தையகருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. அதன்படி, பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Related Articles

Back to top button
Close
Close