fbpx
Others

அரவிந்த் கெஜ்ரிவால்–‘இந்தியா’ கூட்டணியா – பா.ஜ.க.வா … பிரசாரம்..

அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியகட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது;- “நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பா.ஜ.க.வினர் என்னை சிறையில்அடைத்தபோது உங்களை பிரிந்து மிகவும்நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் - டெல்லியில் கெஜ்ரிவால் பிரசாரம்

வருத்தமடைந்தேன். டெல்லி மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன் டெல்லி மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள்என்றுஎனக்குத்தெரியும்.பா.ஜ.க.வைப்பொறுத்தவரை  நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும்.இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாக்கு செலுத்தும்போது, கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என்று சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ந்தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் ‘இந்தியா’ கூட்டணிவேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்துவாக்களியுங்கள். நான் சிறையில் இருந்தபோது என் மன உறுதியை உடைப்பதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால்கடவுள் அனுமாரின் ஆசீர்வாதத்தால் நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.” இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close