திருவாருர்– நீடாமங்கலம்– நீடா பல்நோக்கு சேவை இயக்கம்
திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் நீடா பல்நோக்கு சேவை இயக்கம் துவக்கவிழா மற்றும் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா L V S பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது ஒருங்கினைப்பாளர் நேரு தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் செயலாளர் ஜெகதிஸ் பாபு கௌரவ தலைவர் சந்தானராமன் செல்வராஜ் துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார்
மாணவ மாணவியர் பெற்றோர்கள் கலந்து கொண்டு நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பள்ளி மாணவ மாணவியர் ஊக்க படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். பள்ளி மாணவ மாணவிகள் அறிவு திறமை மேம்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தையும், மற்றும் நிர்வாகிகளையும் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.