fbpx
OthersRE

தமிழகத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 969-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் வைரஸ் தொற்று நோயாளிகள் உள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 182-ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பத்தூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரை மொத்தமாக 97 பேருக்கு கொரோன பாதிப்பு உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்பதின் மூலமாகத்தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close