காங்கிரஸ் எம்.பி., ராகுல் V / S நிர்மலா சீதாராமன்….?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு பார்லி., கூட்டத்தொடரைக் கூட்ட அரசு தயார்; ராகுல் நேரில் வந்து விவாதிக்க தயாரா?’ என சவால் விடுத்திருந்தார்.ஆனால், இந்த சவாலை தவிர்த்த ராகுல், சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு மீண்டும் விவாதம் செய்ய சவால் விடுத்தார். அதில், பிரதமர் எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்யட்டும். நடுவராக மோகன் பகவத்தை கூட இருக்கலாம். நாட்டு மக்கள் முன்னிலையில் விவாதிக்க நான் தயார் என பதிவிட்டிருந்தார்.ராகுலின் இந்த சவாலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவாதத்திற்கு இடம் தேர்வு செய்யுமாறு பிரதமரிடம் ராகுல் கேட்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் பார்லிமென்ட்டே அதற்கான இடம். எஸ்.ஐ.ஆர்., மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடர் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.சமூக வலைதளங்களில் சவால் விடுவதில் காட்டும் ஆர்வத்தை பார்லி.,யில் காட்ட ராகுல் மறுக்கிறார். அரசிடம் கேள்வி கேட்டுவிட்டு, அரசு பதில் சொல்லும் போது வெளிநடப்பு செய்வது அவரது வழக்கம். மற்ற தரப்பு பதிலை கேட்கும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும்.காங்கிரஸ் தலைவர் வீட்டில் நடத்திய போலி பார்லிமென்ட் கூட்டம், பார்லி., மாண்பையே கேலி செய்வதாக இருந்தது. எப்போதும் பயப்படாதீர்கள் என்று பேசும் ராகுல், உண்மையான ஆதாரங்களுடன் களத்திற்கு வந்து, விவாதத்தை முழுமையாக எதிர்கொள்ளட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் மட்டும் சவால் விட்டுவிட்டு, பார்லிமென்ட் விவாதங்களில் இருந்து நழுவும் ராகுலின் இரட்டை நிலைப்பாட்டை, நிர்மலா சீதாராமன் தற்போது கடுமையாக தோலுரித்து காட்டியுள்ளார்.