fbpx
Others

மதுரை கேப்ரான் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது…

மதுரை கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது”

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 3, 2026 அன்று நடைபெற்ற தெற்காசிய ஆங்கில ஆசிரியர் கூட்டமைப்பின் சர்வதேச மாநாட்டில், கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமதி. கே. நிர்மலா சாந்த குமாரி, MA, B.Ed., அவர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டது. ஆசிரியர் பணியில் சிறப்பாகப் பணியாற்றி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற இச்சர்வதேச மாநாட்டில் கல்வியாளர்கள், ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்வித்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.பி. கிறிஸ்டோபர் திலக் அவர்கள் திருமதி. கே. நிர்மலா சாந்த குமாரிக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை” வழங்கி கௌரவித்தார். கல்வித்துறையில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைஅங்கீகரிக்கும்வகையில்இவ்விருது,திருமதி.நிர்மலாசாந்தகுமாரியின்கல்விப்பணிக்குகிடைத்துள்ளமுக்கியமானஅங்கீகாரமாகக்கருதப்படுகிறது. இவ்விருது பெற்ற திருமதி. கே. நிர்மலா சாந்த குமாரிக்கு கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். செய்திகளுக்காக புகழ்பட கலைஞர் ஜெயபிரகாஷ் டி

Related Articles

Back to top button
Close
Close