ஆகஸ்ட் 10முதல், 14-ம் தேதி வரை, ஐந்து நாட்கள் சிறப்பு துாய்மைப் பணி ….கமிஷனர் வினய் ..

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரங்கள், நடைபாதைகள் எல்லாம் துாய்மை செய்யப்பட்டு, தண்ணீரால் கழுவி பராமரிக்கப்பட வேண்டும்* கோவில் ராஜகோபுரம், விமானங்கள், துாண்கள் மற்றும் மதில் சுவர்களில் உள்ள ஒட்டடைகள், துாசுகள் மற்றும் அங்கு வளர்ந்துள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். உயரமான இடங்களில்பணியாற்றுவோர், பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்* கோவிலுக்குள் தேங்கி கிடக்கும், தேவையில்லாத கட்டுமான கழிவுகளை, உடனடியாக அகற்ற வேண்டும். பயன்பாடற்ற மரப்பொருட்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, தனியாக பாதுகாப்பான அறையில் வைக்க வேண்டும். அகற்றப்பட்ட கழிவுப் பொருட்களை, இணையதளம் வாயிலாக அல்லது பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி வாயிலாக விற்பனை செய்யவேண்டும் தரைதளம் அமைக்கப்படாத கோவில் இடங்களில், ஒரு அடி ஆழத்திற்கு, பழைய மண்ணை எடுத்து விட்டு, நல்ல செம்மண் நிரப்பி, பூச்செடிகள், புல்வெளிகள் அமைத்து பசுமையாக்க வேண்டும்* மடப்பள்ளி மற்றும் அன்னதான கூடங்களில் உள்ள சமையல் பாத்திரங்கள், மேடைகள், குடிநீர் மற்றும் உணவுப்பொருள் சேமிப்பு அறைகளை, தினமும் சுத்தம் செய்ய வேண்டும். எலி, பூச்சிகள் வராமலிருக்க, தடுப்பு நடவடிக்கைகள் தேவை* கோசாலைகளை கிருமிநாசினி தெளித்து தினமும் பராமரிக்க வேண்டும். திருக்குளங்களில் மிதக்கும் பாசி, பாலித்தீன் கழிவுகளை அகற்ற வேண்டும்.* கோவிலுக்கு வெளிப்புற பகுதிகளை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது