போடியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்தநாள்…
போடி நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து நடத்திய பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 124 வது பிறந்த நாள் விழாவில் நகரத் தலைவர் கே.எம்.எஸ். முசாக் மந்திரி தலைமையில் வட்டார தலைவர் எஸ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாவட்ட துணைத் தலைவர் எஸ் ஆர் சன்னாசி மாநில இளைஞர் காங்கிரஸின் மாநில செயலாளர் வினோத் குமார் போடி நகர இளைஞர் அணி தலைவர் நாக அர்ஜுன் மற்றும் மகளிர் அணி டாக்டர் பிரியதர்ஷினி ஐ. என். டி. யு.சி. மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர் நகர பொதுச்செயலாளர் கே. அரசகுமார் நகர செயலாளர் எஸ். ஏ. ரவிச்சந்திரன் நகர துணைத் தலைவர் ஏலம் கனகராஜ் மாவட்ட பிரதிநிதிகள் எஸ். காந்தி எஸ். கனகராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது ரசூல் ஆகியோர் கலந்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.