அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை நேற்று (ஜூன் 22) கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாககொண்டாடினர். .அக்கட்சியினர் சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தவெகவினர் வழங்கினர். ரத்த தானம், அன்னதானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்திருந்தனர்.முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியபடத்தைநடிகைத்ரிஷாதனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் த்ரிஷா. இது இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.