நீடாமங்கலம்– மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்று உபசரித்த நிகழ்வு
. ஜூன் 4
பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களை வரவேற்று கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக நீடாமங்கலம் அரசுஉதவிபெறும்இலக்குமிவிலாசநடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களை வரவேற்றி வாழ்த்தினர். நிகழ்விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பத்மஸ்ரீராமன், முன்னாள் மாணவர் பாபு மனோகரன் மற்றும் பெற்றோர்கள் வரவேற்று மாணவர்களுக்கு டீ-சர்ட் , சில்வர் வாட்டர் பாட்டில், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புத்தகம், சீருடை, நோட்டு, புத்தக பை உள்ளிட்ட பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் முதல் நாள் வகுப்பில் கலந்துகொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் தேவி லெட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சிங்கார கஸ்தூரிபாய் நன்றி கூறினார்.