fbpx
Others

தவெக அரசு பதவியேற்றுள்ளநிலையில் தினந்தோறும் கொலை சம்பவங்கள்— டிடிவி தினகரன்..

விஜய்யை முதலில் வெளிய வர சொல்லுங்க.. எங்களிடம் உரசினால் அவ்வளவுதான்.. டிடிவி தினகரன் வார்னிங் | TN Politics: TTV Dhinakaran warned Vijay over his remarks on ADMK - Tamil Oneindiaதமிழகத்தில் திமுக தலைமையிலான கடந்த ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறியதாகவும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்வதாக எதிர்கட்சி சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய பங்கு வகித்தது.. தேர்தலில் திமுக ஆட்சி தோல்விக்கு முக்கிய காரணமாக சட்டம் ஒழுங்கு பார்க்கப்பட்டது  இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஆட்சியாக தவெக அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் தினந்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு –  பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை,தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதியஅரசுபொறுப்பேற்றநாட்களின்எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில்  தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு,பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து  சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை  உணர்ந்து செயல்பட வேண்டும்எனதவெகஅரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துவதாக அந்தபதிவில்டிடிவிதினகரன்குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close