fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது…! சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

7 arrests in kerala gold case

திருவனந்தபுரம்:

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மேலும் 7 கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடரபாக விசாரணை நடத்தி வருகிறது. பார்சலை வாங்க வரும்போது தூதரக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமாரை அதிரடியாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர்,  ரமேஷ் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில், 2 நாள்களுக்கு முன் எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சுங்கத்துறை  இதுவரை 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close