fbpx
OthersRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!

61000 corona cases in Usa in single day

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் 200 நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 61,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  கொரோனா பாதிப்பால் ஒருநாளில் 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,58,731ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும்  134,853 ஆக உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரும் மாகாணங்களான டெக்சாஸ், கலிபோர்னியாவில் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close