fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி

Chief minister edapaddi palanisamy security got corona 07052020

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியிருந்து வருகிறார். இந் நிலையில் அவரது வீட்டில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த  பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

ஆனால் அவர் கொரோனா தொற்று உறுதியாவதற்கு ஒரு வாரம் முன்பே முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்து விடுமுறையில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் சில நாட்களாக பெண் காவலருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு இருப்பது கொரோனா என்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பே முதலமைச்சர் வீட்டில் இருந்து அவர் விடுமுறையில் சென்றதால் அங்குள்ள யாருக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close