fbpx
GeneralRE

ஏப்ரல் 20 க்கு பின் என்னவெல்லாம் இயங்கும். மத்திய உள்துறை அமைச்சகம்.

மே 3-ம் தேதி வரை ஊடரங்கம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

மே 3 வரை ஊடரங்கம் நீடித்து நேற்று பிரதமர் அறிவித்திருந்தார் இந்த நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின் ஊடரங்கு கட்டாயம் எனவும், அதற்குப் பின் அதில் சில தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரகம்..

ஊடரங்கு காலத்தில் பின்பற்ற வேண்டி வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வழங்கியிருக்கிறது.

எந்தெந்த துறைகள் அனுமதி மற்றும் கட்டுப்பாடு என்று கூறியது பற்றி பார்ப்போம்.


1. ஏப்ரல் 20ம் தேதி முதல் விவசாயம் , தோட்டக்கலை, பண்ணை தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி மத்திய உள்துறை அமைச்சரகம் ஊடகங்கள் சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


2. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து தடை தொடரும்.
3. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பாதிப்பு உள்ளவர்கள் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது.

4. பிலம்பிங், எலக்ட்ரீசியன், தட்டச்சு வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வதற்கு அனுமதி.

5.100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பணிகளை தொடரலாம் மத்திய அரசு.

6. ஏப்ரல் 20 முதல் விவசாயம் சார்ந்த இயந்திரம் நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

7. ஏப்ரல் 20 முதல் நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

8. திரையரங்குகள் , வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள் வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்கள் தடை தொடரும்.

9. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆடைகள் ஏற்றுமதி, தொடர்பான நிறுவனங்கள் ஏப்ரல் 20 முதல் செயல்படலாம்.

10. நாடு முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயம் மத்திய உள்துறை அமைச்சகம்.


11. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக் கடைகள் திறந்திருக்க அனுமதி.

12. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், பாதிப்புள்ளவர்கள் வசித்தவர்கள் பகுதி முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாத மத்திய உள்துறை அமைச்சகம்.

       ?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close