பாகிஸ்தானில் பயங்கர செயல்! 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன ;
பாகிஸ்தானில் அதிக அளவில் பெண்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
இதை தொடர்ந்து கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் உள்ள டயாமர் மாவட்டத்தில், இரவு அடையாளம் தெரியாத நபர்களால் 12 பள்ளிக்கூடங்கள் தீ-யிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதை அடுத்து அங்கு காவல் துறை விரைந்தது.
அப்போது அவர்கள் கூறியதாவது ; பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் சில புத்தகங்கள் வெளியே கொண்டுவந்தும் எரிக்கபட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதில் முக்கிய தகவல் என்னவென்றால் எரிக்கபட்ட பள்ளிகளில் பாதி பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் ஆகும்.
இதுவரை இந்த பயங்கர செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க்கவில்லை.பள்ளிக்கூடங்கள் எரிக்கப்பட்டதில் கொந்தளித்துப்போன மக்கள் அந்தப் பகுதியில் அமைந்து உள்ள சித்திக் அக்பர் சவுக்கில் போராட்டம் நடத்தியுள்ளனர்.