M.R. முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப விழா நிகழ்ச்சி–சிறப்பு செய்தி..

கோவை, ஜன., 02 : கோவை ராமநாதபுரம் பகுதி அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் எம்.ஆர். முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி M.R. முருகன் வியாபாரிகள் பேரவையின் மாவட்ட தலைவர் M. முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சூலூர் T.R சந்திரசேகரன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பேரவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய T.R. சந்திரசேகரன், நடந்து முடிந்த கல்வி ஆண்டில் அரசு தேர்வில் 10 மற்றும் 12 ஆவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரொக்க தொகையாக, ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒரு குடும்ப விழாவாக ஒற்றுமையாக நடந்தது வருகிறது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட தலைவர் G. இருதய ராஜா, மற்றும் R.S. கணேசன், G.A. வஹாப், பொன். செல்வராஜ், G. பாக்கியநாதன், G. காளியப்பன், A.S. டேவிட், S. தர்மராஜ், R. நடராஜன், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவரும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.