fbpx
Others

தூத்துக்குடி–ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…

 தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வடக்கன்குளம் ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் ஜாய் பல்கலைகழகம் இயங்கிவருகின்றது. பல்கலைகழகமானது ஏட்டுக்கல்வியோடு அனுபவக் கல்வியையும் கொடுப்பதை நோக்கமான கொண்டு மாணவர்களுக்கு செயல்படுகிறது. அதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் Robotics & Automation Club மற்றும் Design Thinking Hub என்ற குழுக்களின் அடிப்படையில் வெவ்வேறு புலத்தில் பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு அனல்மின் நிலையத்தில் தொழில்முறை கல்விக்கு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.நிறுவனத்தின் முதன்மை பொறியாளர். உயர்திரு. ராஜேஷ் அலெக்ஸ் அவர்கள் அனல்மின் நிலையத்தின் இயக்க நடைமுறைகளையும் மின் உற்பத்தி செயல்பாடுகளையும் மாணவர்களுக்கான கல்வி புலயுத்தின் அடிப்படையின் விளக்கினார். இந்த மின்நிலையமானது 1050 மெகாவாட் உற்பத்தி திறனைக் கொண்டுசெயல்படுவதாகவும். இங்கு உற்பதியாகும் மின்சாராம் தமிழகத்திற்கு மட்டும் இன்றி பிற மாநிலங்களின் மின் தேவைகளுக்கும்பயன்படுத்துவதாகவும்,இதற்குமுலப்பொருளாகநிலக்கரிபயன்படுத்துவதாகவும் விளக்கமளித்தார்.மாணவர்களும் தாங்கள் பயிலும் பாடத்திடன் அடிப்படையில் கேள்விகளை கேட்டு தனக்கான சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டனர். மாணவர்களின் கேள்விக்கு விளக்கமளித்ததோடு நிகழ்வின் இறுதியாக மாணவர்களுக்கு மின் உற்பத்தி மற்றும் இருப்புநிலை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் இயந்திர இயக்கநிலை பயன்படுத்தி மாணவர்களுக்கு இயக்கநிலையை எடுத்துரைத்தார். இந்த நிகழ்சியில் 50க்கும் மேற்பட்ட மாணர்களும் பேராசிரியர்களும் பங்குபெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை முனைவர்.S.பிரபா, முனைவர் P.அருண்பாலாஜி மற்றும் பேரா. சஹாயமேரி ஆல்பீனா செய்திருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close