fbpx
Others

சிறப்புசெய்தி—தொகுப்பு…..

 உட்கார சேர் தர முடியாது.. வீட்டிலிருந்து எடுத்து வாருங்கள் அல்லது நின்று கொண்டே இருங்கள்’மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள அகோனா கிராமப் பஞ்சாயத்தில் பட்டியலின ஊராட்சி தலைவக்கு அவமரியாதைஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராம பஞ்சாயத்தில் கொடியேற்றும் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கு ஷ்ரத்தா சிங் செல்வதற்கு முன்னதாகவே துணை ஊராட்சித் தலைவர் தர்மேந்திர சிங் கொடியை ஏற்றிவிட்டார்பட்டியிலன தலைவரை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுஇதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பட்டியலின ஊராட்சி தலைவர் ஷ்ரத்தா சிங் கலந்து கொண்ட போது நீங்கள் உட்கார சேரை வீட்டிலிருந்து எடுத்து வாருங்கள், இல்லையெனில் தரையில் அமருங்கள் அல்லது நின்று கொண்டே இருங்கள் எனக்கூறி அவமரியதை செய்யப்பட்டார்ஜூலை 2022-ல் ஷ்ரத்தா பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமத்தில் தோராயமாக 1,600 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 50% பேர் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் பட்டியலின, பழங்கும் மற்றும் OBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஷ்ரத்தா சிங் வெற்றியால் ஆத்திரமடைந்த சாதிய இந்துக்கள் தொடர்ந்து சலசலப்பை உருவாக்கி வருவதாக ஷ்ரத்தா சிங் தெரிவித்தார்மேலும், தான் நடத்தப்பட்ட நடத்தையால் மிகவும் வேதனைப்பட்டதாகவும், ஆனால் இந்த பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதாகவும், தனது பஞ்சாயத்தில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்
🔵🔴900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை   ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயரை பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடைஅண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்மோசடியாக ஆசிரியர்களை கணக்கு காட்டிய295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை..
🔵🔴தமிழ்நாட்டில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது   தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5-7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர்,ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறதுசுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
🔵🔴டெல்லியில் உள்துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதாவில் இணைய உள்ளார்.

✍️மகாராஷ்டிராவில் பிரதமர் திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியது  ✍️தானே பகுதியில் 2023 டிசம்பர் மாதம் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்   சிலை நிறுவப்பட்டு8 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உடைந்து நொறுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி  ✍️ காற்றுடன் கூடிய கனமழையால் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து உடைந்ததாக தகவல்.
🔵🔴 எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
🔵🔴சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது ! ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் ! தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை முகமையினால் பராமரிக்கப்படும் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றுள் 25 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டணம் உயர்த்தப்படவுள்ள சுங்கச்சாவடிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி சுங்கச்சாவடிகளும்; ஓமலூர், சமயபுரம், கிருஷ்ணக…
🔵🔴  மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை—-மதுரை பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் சரவணன் புகார் அளித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக மனுவில் புகார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளார்.  *  சென்னை பூந்தமல்லி அருகே வாகனச் சோதனையில் கண்டெய்னரில் இருந்து 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் சோதனையின்போதுபிடிப்பட்ட குட்கா மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல். குட்கா கடத்தல் தொடர்பாக கண்டெய்னர் ஓட்டுநர் சதீஷ் (28) என்பவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் *  திண்டுக்கல்: நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக இடத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெடி தயாரிக்க பயன்படுத்திய இடத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆவிச்சிப்பட்டியில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். * சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் தனியார் பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  *  கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மாயமான வாகனங்களை ஒப்படைக்க ஒப்பந்ததாருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. 45 வார்டுகள் கொண்ட கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற புகார்களை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  *  திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் காப்பர் கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வழிச்சாலையில் மின்கம்பத்தில் இருந்து ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான 500 மீட்டர் மின்கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்கம்பியை திருடிய குணசேகரன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோரை கைது செய்து வெங்கல் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்    *  சென்னை: கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கரூர் ரயில் நிலையத்தில் ஏறி விரைவு ரயிலில் வந்தபோது காட்பாடி அருகே 2 பேர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார். பெண் மென்பொறியாளர் அளித்த புகாரின்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  *  தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன் நண்பரை நம்பிச் சென்ற இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் இருவர் சிக்கியுள்ளனர்  *   திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார். ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்  விழுப்புரம்: விக்கிரவாண்டியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். புருஷானூரைச் சேர்ந்த 17 பேர், துக்க நிகழ்ச்சிக்காக வேனில் சென்னை சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அழுக்கு பாலம் என்ற இடத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது….

Related Articles

Back to top button
Close
Close