
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம், கோட்டக்குப்பம் அனுமந்தை, முருக்கேரி, பிரம்மதேசம், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, மயிலம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைபெய்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் பல இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.















