இபிஎஸ்–எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை…

நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் ஜூன் 11-ம் தேதி அன்று நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.தலைவாசலில் சுமார் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,025 கோடி மதிப்பீட்டில், தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை துவக்கி வைத்து, அதில் ஒரு பகுதியினை 22.2.2021 அன்று திறந்து வைத்தேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு அதிக பால் தரும் பசு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் பால் உற்பத்தி அதிகரித்திருக்கும். நாட்டுக் காளைகள் இனம் காக்கப்பட்டிருக்கும்.கலப்பின ஆடு ஆராய்ச்சி மையம், கோழி இன ஆராய்ச்சி மூலமும், மீன் வளர்ச்சி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இன்று விவசாயிகளின் வருவாய்உபதொழில்கள் மூலம் பல மடங்காக உயர்ந்திருக்கும். இவ்வாறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றாமல், விவசாயிகள் உபதொழில்கள் மூலம் வருவாய் ஈட்டுவதைத் தடுத்து, அவர்களின் வயிற்றில் அடித்துள்ளது விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலின் மாடல் அரசு. மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் ஆய்வுத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்குவதற்கு திமுக மேற்கொண்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது எனது தலைமையிலான அதிமுக அரசு. அதிமுக அரசில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது. அத்திக்கடவு–அவினாசி திட்டம் – சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சுமார் 35 மாத தாமதத்துக்குப் பிறகு நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்த போலி விவசாயி ஸ்டாலின், ஜூன் 11ம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக நாடக வசனம் பேசியுள்ளார். இத்திட்டத்தை மாநில நிதியிலேயே நிறைவேற்றியது எனது தலைமையிலான அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவார்கள். மேலும், ஸ்டாலின் மாடல் அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.next…